Monday, February 10, 2025
HomeLocal Newsநாடாளுமன்றத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு!

நாடாளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு!

parliament election 2024 srilankan voting postal votes 3204

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றன.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே எழுபத்தி ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 ​பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.

அதேநேரம், 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 4 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கொழும்பு 65%
கம்பஹா – 65%
களுத்துறை – 60%
கண்டி – 70%
மாத்தளை – 67%
நுவரெலியா – 68%
காலி – 64%
மாத்தறை – 61%
ஹம்பாந்தோட்டை – 60%
யாழ்ப்பாணம் – 69%
கிளிநொச்சி – 55%
முல்லைத்தீவு – 63%
மன்னார் – 70%
பதுளை – 66%
இரத்தினபுரி – 65%
கேகாலை – 65%
மட்டக்களப்பு – 61%
திகாமடுல்ல – 62%
திருகோணமலை – 67%
குருநாகல் 64%
புத்தளம் – 55%
அனுராதபுரம் – 65%
பொலனறுவை – 65%
மொனராகலை – 63%

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இரவு 7.15 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

parliament election 2024 srilankan voting postal votes 3204
இதையும் படியுங்கள்

இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!

இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!

இலங்கை மீது பொருளாதார தடையை கோரும் சீமான்

கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!

பிள்ளையான் சிஐடிக்கு கடிதம்!

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

இலங்கையின் 10ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பம்!

பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி வாக்களித்தார்!

பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி வாக்களித்தார்!

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்

தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பம்
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular