car hits bike in fatal accident 3438
பொரளை மயானத்திற்கு அருகில் கித்துல்வத்த வீதியில் இன்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாரஹேன்பிட்டியிலிருந்து கித்துல்வத்தை வீதியை நோக்கி வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பொரளை சீவலிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
விபத்து தொடர்பில் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரில் இருவர் வந்ததாகவும், விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் காரில் பொருத்தப்பட்டிருந்த கெமராவை கழற்றிவிட்டு ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
car hits bike in fatal accident 3438
இதையும் படியுங்கள்
இளம் தாயொருவர் திடீரென தவறி விழுந்து உயிரிழப்பு!
இராஜகிரிய ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!
உடற்பயிற்சி செய்தவர்கள் மீது கார் மோதி விபத்து!
கொழும்பில் தம்பதி ஒன்று செய்த அதிர்ச்சி செயல்!
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
மக்கள் ஆதரவை இளந்து நாடாளுமன்றம் செல்லும் நாமல்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
முறைகேடுகள் பல இடம்பெறும் அரச கட்டிடம்!

இம்முறை பாராளுமன்றம் செல்லும் பெண்கள் இதோ!
