actress kasthuri arrested in hyderabad 3469
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அங்கு அவர் தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்து பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர் தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அதாவது, “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?” என்று பேசியிருந்தார்.
மாவீரர் தினம் குறித்த ஜனாதிபதியின் அறிக்கை போலியானது?
ஹம்பாந்தோட்டை வெடிப்பு சம்பவத்தில் இளைஞன் பலி!
தழிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்!
கஸ்தூரியின் இந்த கருத்து தான் சர்ச்சையானது. அவர் தெலுங்கு பேசும் மக்களை இழிவுப்படுத்திவிட்டதாக பொலிஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.
சென்னை, மதுரை, திருச்சி உள்பட பல இடங்களில் நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை எழும்பூர் பொலிசார் விசாரணைக்கு ஆஜராகும்படி கஸ்தூரிக்கு சம்மன் வழங்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னை எழும்பூர் பொலிசார் சார்பில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை பொலிசார் கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே தான் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால் கஸ்தூரிக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை. கஸ்தூரி விரைவில் தனிப்படை பொலிசாரால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் இன்று கஸ்தூரியை தனிப்படை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கஸ்தூரியை தனிப்படை பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் கஸ்தூரி, சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததாகவும், அதனை மோப்பம்பிடித்த தனிப்படை பொலிசார் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை கஸ்தூரிக்கு தெலுங்கு சினிமா துறைக்கும் தொடர்பு உள்ளது. இதனால் நடிகை கஸ்தூரி ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் தான் பதுங்கியிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகித்தனர். இதனால் ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் தனிப்படை பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் கஸ்தூரி பதுங்கிய இடத்தை அடையாளம் கண்டு அதிரடியாக கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தில் கைதான கஸ்தூரியை எழும்பூர் தனிப்படை பொலிசார் சாலை மார்க்கமாக காரில் சென்னை அழைத்து வந்நனர். ஞாயிற்றுக்கிழமை சென்னை அழைத்து வந்து அவரை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
actress kasthuri arrested in hyderabad 3469
இதையும் படியுங்கள்
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
பசறை – பிபில வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஒரே குடும்பம் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து
