youth killed in hambantota explosion 3461
ஹம்பாந்தோட்டை(Hambantota)- அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் 18 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் உள்ள கார்களுக்கு வர்ணம் பூசும் வாகன திருத்துமிடத்தில் இருந்த இரும்பு பெரல் திடீரென வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இக் குறித்த சம்பவத்தில் அங்குனுகொலபெலஸ்ஸ – ரன்ன வீதியில் வசிக்கும் சதீப சித்மின என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
புதிய அரசுக்கு ஆதரவு வழங்க தயார் – சஜித்!
வெடித்துச் சிதறிய இரும்பு பெரல் வாகன திருத்துமிடத்தில் வாகனங்களுக்குப் நிறப்பூச்சு தின்னர் கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படும் வெற்று இரும்பு பெரல் என்றும் , அதில் இருந்த வாயுவே வெடிப்பதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெடித்த பெரலின் மூடி பகுதி கழன்று வீசப்பட்டு இளைஞரின் கழுத்துப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டதால் இளைஞர் அகுனகொலபெலஸ்ஸ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.
youth killed in hambantota explosion 3461
இதையும் படியுங்கள்
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
தழிழர் தரப்பிற்கு ஏற்பட்டுள்ள சவால்!
சுஜீவ சேனசிங்கவின் V8 கார் – இரசாயன பகுப்பாய்வாளருக்கு நினைவூட்டல்

லொஹான் மற்றும் ஷஷிக்கு மீண்டும் விளக்கமறியல்
