Friday, February 7, 2025
HomeLocal Newsபத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று!

first session of the 10th parliament begins today 3535

நேரலை இதோ……
அதில் பங்கேற்கும் எம்.பி.க்கள் தற்போது நாடாளுமன்றத்துக்கு வருகின்றனர்.

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரியவும் நாடாளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது, முதலாவது நிகழ்வாக சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். சபாநாயகரினால் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இதனை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேற்கொண்டு வைப்பார். இவ்வாறு பதவிச்சத்தியம் செய்துகொண்ட சபாநாயகர் அக்கிராசனத்தில் அமர்வதற்கு முன்னர் தான் தெரிவுசெய்யப்பட்டமைக்கு நன்றிதெரிவித்து சிறியதொரு உரையாற்றுவதும் சம்பிரதாயமாகும். தெரிவுசெய்யப்பட்ட புதிய சபாநாயகருக்கு ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், சபாநாயகரும் நன்றி தெரிவித்து உரையாற்றுவார். அதன் பின்னர் சபா மண்டபத்திலுள்ள சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை எடுத்துக்கொள்வர்.

இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர், குழுக்களின் தவிசாளர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளுக்கான உறுப்பினர் தெரிவு இடம்பெறவுள்ளது.

உதவியாளரால் சிக்கிய பிள்ளையான் இன்றும் பலமணி நேரம் சி.ஐ.டியில் வாக்குமூலம்!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!

பெண் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமான ஆசன ஒதுக்கீடுகள் எதுவும் இருக்காது என்பதுடன், விரும்பிய ஆசனத்தில் அமர்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். செங்கோல் சபா மண்படத்தில் வைக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டிய நாள் மற்றும் நேரம் அடங்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வாசிக்கப்படுவது முதலாவது விடயமாக சபையில் முன்னெடுக்கப்படும்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத் தொடரையடுத்து முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்க நாடாளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுகிறது.

அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார்.

வலையொளி இணைப்பு:

first session of the 10th parliament begins today 3535

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

விவாகரத்து பற்றி ஏ.ஆர் ரஹ்மானின் எக்ஸ் தள பதிவு!

தமிழ் சினிமாவின் ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கிறதா?

தமிழ் சினிமாவின் ‘பான் இந்தியா’ திரைப்படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கிறதா

ஜூலியா பஸ்த்ரானா: உலகின் ‘அசிங்கமான பெண்’ என்று ஐரோப்பியர்களால் கூறப்பட்ட பெண்ணின் கதை

ஜூலியா பஸ்த்ரானா
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular