Friday, February 7, 2025
HomeLocal Newsஉதவியாளரால் சிக்கிய பிள்ளையான் இன்றும் பலமணி நேரம் சி.ஐ.டியில் வாக்குமூலம்!

உதவியாளரால் சிக்கிய பிள்ளையான் இன்றும் பலமணி நேரம் சி.ஐ.டியில் வாக்குமூலம்!

Pillaiyaan continues testify before CID today 3509

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (20) காலை முன்னிலையாகிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளியை பிரித்தானிய சேனல்-4 தொலைக்காட்சி கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் திகதி ஒளிபரப்பியது.

சுமார் 50 நிமிடங்கள் ஒளிபரப்பான குறித்த காணொளியில், சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள பிள்ளையான் அணியின் ஊடகப் பேச்சாளரான அசாத் மௌலானா என்பவரே இந்த தகவலை முன்வைத்துள்ளார்.

பின்னர், சம்பந்தப்பட்ட காணொளியின் உள்ளடக்கம் குறித்து ஆராய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையைத் தொடங்கியது.

பிள்ளையான் சி.ஐ.டிக்கு சமுகமளிப்பு!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!

நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!

இதன்படி, மேற்படி விசாரணை தொடர்பான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கடந்த 12ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், அன்றைய தினம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகாத நிலையில், சட்டத்தரணிகள் ஊடாக வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறு திகதியை அவர் கோரியிருந்தார்.

அதன்படி இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டு இன்று காலை 9.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Pillaiyaan continues testify before CID today 3509

இதையும் படியுங்கள்

முச்சக்கரவண்டி விபத்து 4 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!

புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!

அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவித்தல்!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவித்தல்!

7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது!

7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது!
RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular