Thursday, March 13, 2025
HomeLocal Newsஅல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்!

அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்!

student dies mother legal action 4733

கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் பயிலும் மாணவன் மற்றம் மாணவி என இருவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜிவோன் ஜோரோ சிங் என்ற 15 மாணவனின் மரணத்திற்கு அவரின் தாயர் நீதி கோரி போராடி வருகின்றார்.

பாடசாலையின் அலட்சியமும் கடமையின்மையும் தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்று ஜிவோனின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற நாளில் நடந்த நிகழ்வுகளுக்கு விளக்கம் கோரி பாடசாலைக்கும் அதன் உயர் அதிகாரிகளுக்கும் ஜிவோனின் தாயார் பல கடிதங்கள் எழுதியுள்ளார்.

எனினும், நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட அனைத்து கூற்றுக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் மறுத்து பாடசாலை தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டுளு்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது மகனுக்கு நீதி வழங்கப்படுவதை உறுதி செய்ய மற்றொரு படி முன்னேறி, ஜிவோனின் தாயார் மோனா ரோக்கி சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக அறியமுடிகின்றது.

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?

இறக்குமதியாகும் அரிசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விநியோகம்!

இதன் ஒருபடியான பாடசாலைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடித்தில் 500,000,000 ரூபா இழப்பீடு கோரியுள்ளார்.

மேலும், அந்தக் கடிதத்தில், ‘பாடசாலையில் அலட்சியப் போக்கும், கவனக்குறைவும்தான் ஜிவோனின் அகால மரணத்திற்கு நேரடிக் காரணமாக அமைந்தது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலையின் சிசிடிவி காட்சிகள், அல்டயர் கட்டிட வளாகத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த மற்றொரு மாணவி ரோஸும், ஜிவோனும் பிற்பகல் 2.20 மணியளவில் பாடசாலையில் விட்டு வெளியேறியதைக் காட்டுகின்றது.

எனினும், பிற்கபல் 4.32 மணிக்கே பாடசாலை தரப்பில் இருந்து தனக்கு தகவல் தெரிவித்ததாக மோனா தெரிவித்துள்ளார். அதேநேரம், ரோஸின் பெற்றோருடன் பிற்பகல் 3.00 மணிமுதல் பாடசாலை தொடர்பில் இருந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அவர்கள் எனக்கு முன்பே தெரிவித்திருந்தால், நான் என் மகனைக் காப்பாற்றியிருக்க முடியும். கிடைக்கக்கூடிய ஆதாரங்களின்படி, என் மகன் மாலை 4.45 மணியளவில் விழுந்து உயிரிழந்தார் என்று நான் நம்புகிறேன்.

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பாடசாலை தரப்பினரும், ரோஸின் பெற்றோரும் என் மகனுடன் தொடர்பில் இருந்தனர், மேலும் அந்த நேரத்தில் அவர்கள் பொலிஸாரையும் தொடர்புகொண்டுள்ளனர்.

அவர்கள் ஏதோ ஆபத்தை உணர்ந்த நிலையிலேயே பொலிஸாரை தொடர்பு கொண்டனர் என்று மோனா மேலும் தெரிவித்துள்ளார்

student dies ​​mother legal action 4733

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

மாத்தறை சிறையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்

மாத்தறை சிறையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான மேலதிக தகவல்

இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி! 

இலங்கை அணி 07 ஓட்டங்களால் வெற்றி! 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular