People caught while throwing old fish into wild 4709
கிளினிங் ஸ்ரீ லங்கா திட்டம் இன்று உதயமாகுவதற்கு முன் நகரங்களில் உள்ள மீன் வியாபார நிலையங்களில் இருந்து அகற்றப்படும் கழிவு பொருட்களுடன் குழுவொன்றை அம்புலாவ பகுதியில் உள்ள இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

புதிய ஆண்டு உதயத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அம்புலுலாவ பிரதேச மக்கள் உறங்காமல் இருந்து பழைய மீன்களை இங்கு வந்து வீசும் நபர்ளை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அம்புலாவ காட்டு பகுதியில் பழைய மீன்களை வீசி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறிய ரக வாகனமொன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காட்டுப் பகுதியில் வீசப்பட்ட கழிவு மீன்களை
அந்த இடத்தில் இருந்து அவர்களையே சேகரிக்கவும் செய்துள்ளனர்.
குறித்த பிரதேச மக்கள் இன்று அதிகாலை இந்த முயற்சியை முறியடித்ததுடன், பழைய மீன்களை ஏற்றி வந்த லொறியையும் சந்தேகநபர்களையும் கம்பளை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




caught while throwing old fish into wild 4709
இதையும் படியுங்கள்
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!
நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்!
எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு!
“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்
