payment for kidney patients in january 4680
சிறுநீரக நோயாளர்களுக்கான 7,500 ரூபா கொடுப்பனவை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது.
சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தின் பின்னர் கொடுப்பனவு குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படையற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நாட்களில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், அதிகாரமளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிராந்திய செயலக மட்டத்தில் தகவல் புதுப்பித்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனூடாக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைகளில் இன்று திருத்தம்?
நடிகை சித்ராவின் தந்தை அதிகாலையில் தற்கொலை – காரணம் என்ன?
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு குறைந்த செலவில்!
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் தகவல்களின்படி, நாட்டில் தற்போது 47,244 சிறுநீரக நோயாளிகள் இருப்பதாகவும், எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், எனவே இந்த தகவலை புதுப்பிக்க வேண்டியது மிகவும் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதன் காரணமாக தற்போது சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு பெறும் எவருக்கும் கொடுப்பனவு எவ்விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
payment for kidney patients in january 4680

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!
செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்
79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

அரச சேவையில் ஆட்குறைப்பு செய்யப்படாது
