Saturday, June 14, 2025
HomeLocal Newsபிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் - உயிராபத்து என்பது பொய்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

Field Marshal Sarath Fonseka Mahinda Security 4699

தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எந்தவிதமான உயிரச்சுறுத்தலும் இல்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று (31) மாலை செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில், ‘மகிந்த ராஜபக்சவின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு வைராக்கியமும் இல்லை.

போர் இடம்பெற்ற தருணத்திலும் அவருக்கு எவ்வித உயிர் அச்சுறுத்தலும் இருக்கவில்லை. மகிந்த ராஜபக்ச மீது குண்டுத் தாக்குதலை நடத்தவோ அல்லது வேறு விதமான தாக்குதலை நடத்தவோ இல்லை.

மகிந்த ராஜபக்ச தனியாகவா யுத்தம் செய்தார்? நாம் யுத்தம் செய்யவில்லையா? யுத்தத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதியான எனது முழுமையான பாதுகாப்பை 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதற்கு முன்னரே நீக்கினர்.

சிகரட் விலை அதிகரிக்கும் சாத்தியம்? 2025 பாதீடு குறித்த தீர்மானம்!

டின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியை நீக்குமாறு கோரிக்கை!

தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி!

அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? வெலிகடை சிறையில் என்னை அடைத்த தருணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் சிறையில் இருந்தார்.

அந்த தருணத்திலும் எனக்கு எவ்வித விசேட பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை.

பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த தருணத்தில் இராணுவத் தலைமையகத்தில் என்மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தவந்திருந்த மொரிஸ் என்ற நபரும் நானும் ஒரே வாங்கில் தான் அமர்ந்திருந்தோம்.

அப்போது எனக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லையா? மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒருபோதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த மாட்டார்கள்.

மகிந்த ராஜபக்ச பிரபாகரனுடன் சமதான பேச்சுகளை நடத்தி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதாகவே ஆட்சிக்கு வந்தார்.

போர் முடிவதற்கு 3 மாதங்கள் இருந்த தருணத்தில் போர் நிறுத்தமொன்றையும் அறிவித்தார்.

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் தப்பித்துச் செல்லவே அவர் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தார்.

போர் நிறுத்த அறிவிப்பு காரணமாக மூன்று மாதங்கள் போர் பின்நோக்கிச் சென்றதுடன், இராணுவத்தினரும் 5 கிலோ மீற்றர் தூரம் வரை பின்னோக்கி நகரும் நிலை ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்ச புலிகளுடன் நெருங்கிய உறவை பேணியிருந்தார்.

அதனால் புலிகளால் அவரது உயிருக்கு ஒருபோதும் ஆபத்து இல்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Field Marshal Sarath Fonseka Mahinda Security 4699

இதையும் படியுங்கள்

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

நாளை ஆரம்பமாகும் “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

எதிர்வரும் ஜனவரியில் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு!

“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

“க்ளீன் ஶ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular