srilanka passport supply demand que again 2739
கடவுச்சீட்டு தொடர்பில் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசைகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கோரிக்கையை அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்றும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய கடவுச்சீட்டுக்கள் தொகுதிகளாக பெறப்பட்டு வருவதாகவும் நவம்பர் நடுப்பகுதி வரையில் 100,000 கடவுச்சீட்டுகள் கையிருப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அவசர தேவை உள்ளவர்கள் மட்டும் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்தும் வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அதிகாரிகள் முறையான செயல்முறையை நடைமுறைப்படுத்தாமையால், குழப்பநிலையும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
srilanka passport supply demand que again 2739
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!