srilanka petroleum price reduces today ioc lanka 2743
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…
அத்துடன் 319 ரூபாயாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி
மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை இன்று (31) நள்ளிரவு முதல் திருத்தப்பட வேண்டும்.
இத்தகைய பின்னணியில் கடந்த சில வாரங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
எவ்வாறாயினும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது எரிபொருள் விலைத் திருத்தம் இதுவாகும், முதல் திருத்தமாக கடந்த மாதம் எரிபொருள் விலை ஓரளவு குறைக்கப்பட்டது.
மேலும், தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலை நுகர்வோர்களால் உணரப்படும் எண்ணிக்கையில் குறைக்கப்படும் என சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், இந்த நாட்டில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தற்போதைய அரசாங்கம் எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை.
கைவிடப்பட்ட போராட்டம்
போராட்டத்தை கைவிட்ட புகையிரத நிலைய அதிபர்கள்
நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
srilanka petroleum price reduces today ioc lanka 2743
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
Sri Lanka-Canada Business Council Concludes Successful Trade & Investment Mission to Canada
Ranil speaks out against revoking privileges of former Presidents