Tuesday, March 11, 2025
HomeLocal News"இராமநாதன் அர்ச்சுனா" எப்படி"அர்ஜுனா லோச்சன்” ஆகினார்? உண்மையான சந்தேக நபர் யார்? வழக்கு ஒத்திவைப்பு!

“இராமநாதன் அர்ச்சுனா” எப்படி”அர்ஜுனா லோச்சன்” ஆகினார்? உண்மையான சந்தேக நபர் யார்? வழக்கு ஒத்திவைப்பு!

ramanathan archuna lochan case adjourned 5542

சரியான சந்தேகநபரை அடையாளம் காண முடியாததால்,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.

அதன்படி,குறித்த வழக்கு எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (22) நீதிமன்றத்தில் முன்னிலையாகி, ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தார்.

இது தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ​​அநுராதபுரம் பொலிஸார் மூலம் சந்தேக நபரின்”அர்ஜுனா லோச்சன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

எனினும், ஓட்டுநர் அனுமதிபதிப் பத்திரத்தில் அவரது பெயர் இராமநாதன் அர்ச்சுனா என குறிப்பிடப்பட்டிரு்தது.

எனவே, சரியான சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சட்டத்தரணி தெரிவித்தார்.

அநுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் நேற்று (21) அதிகாலை போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு!

இன்ஸ்டகிராமின் புதிய அப்டேட் – கூடிய நேரம் வீடியோ!

பொலிஸாருக்கு இடையூறு : அர்ச்சுனா எம்.பி நகர்த்தல் பத்திரம் தாக்கல்!

அதன்படி, போக்குவரத்து பொலிஸாரின் உத்தரவை மீறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் கீழ் எம்.பி.க்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதன்படி, இந்த விவகாரம் தொடர்பில் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறும் நீதிமன்றம் அநுராதபுரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ramanathan archuna lochan case adjourned 5542

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

மின்னல் தாக்கம் ஏற்படலாம் – முன்னெச்சரிக்கை தேவை

மின்னல் தாக்கம் ஏற்படலாம் - முன்னெச்சரிக்கை தேவை

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு

தேங்காய் பிரச்சினைக்கு தீர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular