Archuna Mp Files in courts Motion to Dismiss 5527
பொலிஸாருடனான வாக்குவாதம் தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அனுராதபுரம் – கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராமநாதன் அர்ச்சனாவைக் கைது செய்வது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.
மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு!
இன்ஸ்டகிராமின் புதிய அப்டேட் – கூடிய நேரம் வீடியோ!
வீதி விதிகளை மீறி காரைச் செலுத்தியமைக்காக பொலிஸார் இராமநாதன் அர்ச்சுனாவின் காரை தடுத்து நிறுத்தியதாகவும், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் நேற்று முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்தப் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை இன்றைய தினம் தாக்கல் செய்து குறித்த வழக்கை இன்றைய தினமே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பிற்பகல் 1.30 க்கு வழக்கை விசாரிக்க அனுராதபுரம் நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அதிகாலையில் பிடிபட்ட அர்ச்சுனா எம்.பி.- பொலிஸாரின் முட்டாள்தனமான செயல்!
அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
Archuna Mp Files in courts Motion to Dismiss 5527

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

பேஸ்புக் ஊடாக நிதி மோசடி
