no confidence motion against speaker 4049
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது சபாநாயகரோ விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!
அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!
அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!
மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!
“அவர் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாநிதி பட்டம் பெற்றிருந்தால், இந்தக் கதைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அதற்கு பதில் தராமல் காலம் தாழ்த்தி வருவதும், அரசாங்கம் தரப்பில் பேசப்பட்ட ஊடகவியலாளர் செய்தியில் பதில் அளிக்காமல் இருப்பதும், கலாநிதி பட்டம் தொடர்பான விவகாரத்தை நாடாளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கியதும் பெரும் சிக்கலைக் காண முடிகிறது.
அவரது கலாநிதி பட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் நாங்கள் கலந்துரையாடப் போகிறோம். அப்படி நடந்தால், தேசிய மக்கள் சக்தி எம்பிக்களும் தங்கள் மனசாட்சிப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது வாக்களிப்பார்கள்” என்றார்.
no confidence motion against speaker 4049

இதையும் படியுங்கள்
வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!
மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!
சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
