Friday, February 7, 2025
HomeCinema Newsவெளியானது கூலி அப்டேட் Chikitu Vibe… ரஜினிகாந்த் நடனத்தில் பட்டையை கிளப்புறாரே!

வெளியானது கூலி அப்டேட் Chikitu Vibe… ரஜினிகாந்த் நடனத்தில் பட்டையை கிளப்புறாரே!

rajinikanth koolie film update today birthday 4043

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படம் உருவாகிவருகிறது. அனிருத் இசையமைக்க நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துவருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துவருகிறது. ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூலி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

ரஜினிகாந்த் இன்று தனது 74ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். அவரது ரசிகர்களும் அவரின் வீட்டுக்கு முன்பு குழுமி தங்களது வெறித்தனமான அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

தங்கள் தலைவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்து; தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் அரசியல் வருகை கடினமாக உள்ளது!

அலப்பறை அர்ச்சுனாவும் கண்டு கொள்ளாத அரசும்!

அர்ச்சுனாவுக்கு எதிராக முறைப்பாடு!

மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி!

இதற்கிடையே அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அதனை ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

ஆனால் எதிர்பார்த்தபடி படம் பெரிய வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக ரஜினிகாந்த்தும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட் ஆகினர். முக்கியமாக அதற்கு முன்னதாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானதால்; அந்தப் படத்தின் வசூல் சாதனையை வேட்டையன் முறியடிக்கும் என்று எதிர்பார்த்திருந்தார்கள்.

ஆனால் அது நடக்கவில்லை. வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி. அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முக்கியமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர்கான் இந்தப் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார். முதலில் அந்த ரோலுக்கு ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அதில் நடிக்க அவர் மறுத்துவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். ஏற்கனவே அவர் தளபதி படத்தில் தேவா என்ற கேரக்டரை ஏற்றிருந்தார் . அந்த செண்ட்டிமெண்டாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதாலும் இந்தப் படம் மெகா ஹிட்டாகுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. அதேசமயம் லோகேஷின் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படத்தின் பின்னர் இந்தப் படத்தின் மூலமும் தனது பெயரை நிரூபிக்க காத்திருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று கூலி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தில் இடம்பெற்றிருக்கு Chikitu Vibe என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியாகியிருக்கிறது. அதில் ரஜினிகாந்த் படு ஸ்டைலாக நடனம் ஆடியிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம தலைவர் டான்ஸில் பட்டையை கிளப்புறாரே என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

rajinikanth koolie film update today birthday 4043

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular