Friday, February 7, 2025
HomeSports Newsமேற்கிந்திய தீவுகள் மகளிரை வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவான நியூஸிலாந்து மகளிர்!

மேற்கிந்திய தீவுகள் மகளிரை வென்று இறுதிப்போட்டிக்கு தெரிவான நியூஸிலாந்து மகளிர்!

சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் மகளிருக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை 8 ஓட்டங்களால் தோல்வியடையச் செய்துள்ளது.

சார்ஜாவில் நேற்று (18.10.2024) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுக்கள் இழப்புக்கு 128 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கட்டுக்கள் இழப்புக்கு 120 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

இந்தநிலையில் இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி நாளை துபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறவுள்ள மகளிருக்கான உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடவுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை தோல்வியடையச் செய்த தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular