india kneels again australia takes series 4876
போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா அணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடந்த ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளதுடன், தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றியுடன் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023-25 இன் இறுதிப் போட்டிக்கும் அவுஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து அவுஸ்திரேலியா விளையாடவுள்ளது.
குட்டிக் குழந்தை அஹானாவின் சுட்டித்தனங்கள்!
குறைந்த விலையில் மதுபானத்தை உற்பத்தி செய்ய அரசாங்கம் யோசனை!
28 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தங்கத்துடன் மூவர் கைது!
ஆஸ்திரேலியா இப்போது WTC இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.
ஐந்துப் போட்டிகள் கொண்ட போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 181 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், இந்திய அணி நான்கு ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றிருந்தது.
முதல் இன்னிங்ஸில் பந்து வீசியப் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயமடைந்திருந்தார். எவ்வாறாயினும், இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியை வெறும் 157 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா அணியினர் சுருட்டியிருந்தனர்.
இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இந்த இலக்கை அவுஸ்திரேலியா அணி நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து அடைந்திருந்தது.
காயம் காரணமாக பும்ரா இரண்டாம் இன்னிங்ஸில் பந்து வீசவில்லை என்பதுடன், போட்டியின் தொடர் ஆட்டநாயகன் விருதும் பும்ராவிற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
india kneels again australia takes series 4876


இதையும் படியுங்கள்
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்!
வெலிகமயில் பயங்கரம் 5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!
மதத்தின் பெயரால் பாலியல் லீலை – இலங்கை வைத்தியர் சிக்கினார்!
ஜனாதிபதி – சட்டமா அதிபர் இடையே சந்திப்பு

பல்வேறு பகுதிகளில் விபத்து- 5 பேர் பலி
