fatal accident kurunegala 4people killed 5924
தொரடியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில், தோரயாய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த மற்றொரு தனியார் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த 20இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 நாட்களில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் புதிய திட்டம் ஆரம்பம்!
சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்!
இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைப்பு!
வழமைக்கு திரும்பும் மின்விநியோகம் – காரணம் இதுதான்!
நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொரடியாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வலையொளி இணைப்பு (அத தெரண ஊடகம்)
fatal accident kurunegala 4people killed 5924


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
சர்வதேச ரீதியில் சீகிரியாவிற்கு முதலிடம்
