Friday, March 14, 2025
HomeLocal Newsகதிர்காம ஆலயத்தின் நிதியில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு!

கதிர்காம ஆலயத்தின் நிதியில் எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு!

first bone marrow transplant unit opens 4749

இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் கதிர்காம ஆலயத்தின் நிதி அனுசரணையுடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட முதல் மற்றும் ஒரே எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை பிரிவு இதுவாகும்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற திறப்பு விழாவில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

மஹரகம அபெக்ஷா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், கதிர்காமம் ஆலய நிதி உதவியுடன் 2023 ஆம் ஆண்டு மூன்று மாடிகளைக் கொண்ட சிகிச்சை வளாகம் நிர்மாணிப்பதற்காக அதன் பஸ்நாயக்க நிலமே முன்வந்தார்.

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?

இறக்குமதியாகும் அரிசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விநியோகம்!

இத்திட்டத்திற்கு விமானப்படையினரின் உழைப்பின் காரணமாக மூன்று மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகம் நான்கு மாடிகளை கொண்ட சிகிச்சை வளாகமாக கட்டப்பட்டு கடந்த வருடம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களைப் பயன்படுத்தி, புதிய எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சை சிகிச்சைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்விற்கு இந்த திட்டம் நம்பிக்கையளித்துள்ளது.

இந்த பிரிவின் அனைத்து பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் இலங்கை விமானப்படைக்கு பங்களிப்பை வழங்குவதற்கு விமானப்படை தளபதி இதன்போது தமது இணக்கத்தை வௌியிட்டார்.

first bone marrow transplant unit opens 4749

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

ஜனவரி 7 முதல் 10 வரை பாராளுமன்றம் கூடுகிறது

ஜனவரி 7 முதல் 10 வரை பாராளுமன்றம் கூடுகிறது

இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு ஆரம்பம்

 இலங்கையில் முதலாவது எலும்பு மஜ்ஜை சிகிச்சை பிரிவு ஆரம்பம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular