electricity bill reduced 20 percent 5376
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) நடவடிக்கை எடுத்தது.
இதற்கமைய, இன்று (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
நிலவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ்!
உப்பும் உறவும் கைப்பிடியளவு என்று ஏன் சொல்கிறார்கள்?
கோட்டாபய – மனுஷ சிஐடியில் முன்னிலை!
இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி, வீட்டுப் பிரிவிற்கான மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைவடையும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 21 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
உணவகங்களுக்கு 31 சதவீதமும் மற்றும் தொழில்துறைக்கு 30 சதவீதமும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்கள் 12% குறைக்கப்பட்டுள்ளன.
அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
electricity bill reduced 20 percent 5376


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
மற்றுமொரு அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் – வௌிப்படுத்திய பதில் ஐஜிபி
