SpaceX sent 2 landers to explore the moon 5234
நிலவில் ஆய்வு நடத்துவதற்காக, ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம் தனது ‘பாஃல்கன் 9’ உந்துகணை மூலம் 2 ‘லேண்டர்’ சாதனங்களை நிலவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவில் கேப் கெனவரல் நகரில் உள்ள அமெரிக்க விண்வெளி மையமான ‘நாசா’வின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அவை செலுத்தப்பட்டன.
கடந்த வருடம் முன்பு, ஜப்பான் நாட்டின் ‘ஐஸ்பேஸ்’ நிறுவனத்தின் முதலாவது ‘லேண்டர்’ நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
தற்போது, அந்நிறுவனம் தனது லேண்டரை மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. அதனுடன் ‘ரோவர்’ சாதனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலி ZAM ZAM நீர் விற்பனை: $2.5 மில்லியன் டொலர் லாபம் ஈட்டியவர் கைது!
குடிபோதையில் ரயில் அல்லது பேருந்தில் ஏற அனுமதி இல்லை – மீறினால் கடும் நடவடிக்கை!
முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை!
ஆய்வுக்காக நிலவில் அழுக்குகளை சேகரிக்க ‘ரோவர்’ சாதனம் பயன்படுத்தப்படும்.
எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்காக நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரம் இருக்கிறதா என்ற ஆய்வும் நடத்தப்படும்.
இதுபோல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ‘பயர்பிளை ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘லேண்டர்’ சாதனம் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
2 மீட்டர் உயரம் கொண்ட அந்த லேண்டர், முதலில் நிலவை சென்றடையும். மார்ச் மாதத்தின் ஆரம்பத்திலேயே அங்கு தரையிறங்கும்.
ஆய்வுக்காக அழுக்குகளை சேகரிக்கும். மேற்பரப்புக்கு அடியில் நிலவும் வெப்பநிலை அளவிடப்படும்.
ஆனால், சற்று அளவில் பெரிதான ‘ஐஸ்பேஸ்’ நிறுவனத்தின் லேண்டர் மெதுவாக பயணம் செய்யும். மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில்தான் நிலவில் தரையிறங்கும்.
மேற்கண்ட 2 லேண்டர்களும் ஒன்றாக உந்துகணையில் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், 1 மணி நேரத்துக்கு பிறகு, திட்டமிட்டபடி பிரிந்து, தனித்தனி சுற்றுவட்டப் பாதையில் பயணத்தை தொடர்ந்தன.
SpaceX sent 2 landers to explore the moon 5234


இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்
