Monday, February 10, 2025
HomeWomen's Specialஉப்பும் உறவும் கைப்பிடியளவு என்று ஏன் சொல்கிறார்கள்?

உப்பும் உறவும் கைப்பிடியளவு என்று ஏன் சொல்கிறார்கள்?

salt and relationships are the size of a handful 5354

சமையல் குறிப்புகளில் உப்புக்கு மட்டும் பெரும்பாலும் அளவு குறிப்பிடமாட்டார்கள்.

‘உப்பு உங்கள் ருசிக்கேற்ப அல்லது திட்டமாக’ என்றிருக்கும். ஆனால், உப்புதான் சமையலின் சுவையைத் தீர்மானிக்கும்.

உறவும் உப்பும் ஒன்றுதான். அதிகமானால் இம்சை, குறைந்தால் தொல்லை. சில பதார்த்தங்களில், உப்பு குறைந்தாலோ கூடிவிட்டாலோ சரிசெய்யவே முடியாது.

குடும்பத்தலைவிகள் குழம்பு கொதிக்கும் போதே வாசத்தை வைத்து, “உப்பு பத்தாது.

ஒரு சொல்லு உப்பு (சிட்டிகை உப்பு) சேரு” என்பார். சிலநேரம், “மூணு விரலளவு (நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் மூன்றையும் இணைத்து எடுக்கணும்) போடு” என்பார்.

salt and relationships are the size of a handful 5354

போலி ZAM ZAM நீர் விற்பனை: $2.5 மில்லியன் டொலர் லாபம் ஈட்டியவர் கைது!

குடிபோதையில் ரயில் அல்லது பேருந்தில் ஏற அனுமதி இல்லை – மீறினால் கடும் நடவடிக்கை!

முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை!

பெரிய பாத்திரத்தில் இருக்கும் தோசை மாவில் ஒரு கை உப்பு அள்ளிப் போடு என்பார்.

உப்பு நமது உணவை சுவையாக்குகிறது. அது மனித வாழ்க்கைக்கும் இன்றியமையாதது.

உடலில் உள்ள நீரின் அளவை பராமரிக்க, உப்பில் இருக்கும் சோடியம் மிகவும் அவசியம். சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் அது உதவுகிறது.

“உப்பு வாழ்க்கைக்கு அவசியமானது” என்று ஒரே வாக்கியத்தில் உப்பின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார். அமெரிக்காவின் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து அறிவியல் துறையின் பேராசிரியர் பால் ப்ரெஸ்லின்.

salt and relationships are the size of a handful 5354

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே அதிகமாக உள்ளது.

நிறைய நாடுகளில், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஒளிந்திருக்கும் உப்பின் அளவே, அதிகமான உப்பு உட்கொள்ளுதலுக்கு காரணமாக அமைகிறது.

ஆனால், சில நேரங்களில் வரலாற்று காரணங்களும் இருக்கலாம். கசகஸ்தானில் இருக்கும் மக்கள் ஒரு நாளுக்கு 17 கிராம் உப்பு எடுத்துக் கொள்கின்றனர்.

salt and relationships are the size of a handful 5354

உப்பு உள்ளே நுழைந்தால் உடல் என்ன செய்யும்?

நமது எண்ணங்கள் மற்றும் உணர்திறன்களுக்கு அடிப்படையான மின் சமிக்ஞைகளை உப்பு உடலில் செலுத்துகிறது. அதனால் நமது உடலும் மனமும் ஆற்றல் பெறுகின்றன.

நாம் உப்பை உட்கொள்ளும் போது, நாக்கில் உள்ள சுவையணுக்கள் மற்றும் தொண்டையில் உள்ள தசைகளால் அவை அடையாளம் காணப்படுகின்றன.

“உப்பு நம்முடைய உடல் மற்றும் மனதை மின்னாற்றல் பெறச் செய்கிறது” என்கிறார் பேராசிரியர் ப்ரெஸ்லின்.

“உப்பில் உள்ள சோடியம் அயனிகள் எச்சிலில் கரைந்துவிடும்”

பிறகு இவை சுவையணுக்களில் நுழைந்து செல்களை இயக்கத் தொடங்கும்.

“ஒரு மின் பொறியை உண்டாக்கும்” என்று விளக்குகிறார்.

எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்?

உப்பின் அளவு காரணமாக உடலில் ஏற்படும் துல்லியமான விளைவுகள், ஒவ்வொருவரது மரபணு அமைப்பை பொருத்தது.

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேலான மக்கள் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அளவை குறைத்துக் கொண்டால், இதனை தடுக்கவும், இதற்கு சிகிச்சை அளிக்கவும் முடியும்.

“அதிக அளவிலான உப்பை உட்கொள்ளும் போது, உடல் முதலில் செய்வது, அந்த உப்பை கரைப்பது.

உடல் நீரை தக்க வைத்துக் கொள்ளும். எனவே, கூடுதலான திரவத்தைக் கையாளும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும்,” என்று விவரிக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள நியூகாசில் பல்கலைகழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறையின் பேராசிரியர் கிளையர் காலின்ஸ்.

இதன் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கலாம்.

“உங்கள் ரத்த நாளங்கள் பலவீனமாக இருந்தால், உதாரணமாக மூளையில், அவை வெடித்து, அதனால் பக்கவாதம் ஏற்படக் கூடும்” என்கிறார்.

பிரிட்டனில், ஒரு நாளில் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படும் உப்பின் அளவு எட்டு கிராமாக குறைந்துள்ளது.

எனினும், இது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட இப்போதும் அதிகம்.

உப்பின் அளவை குறைக்க உணவு தயாரிப்பாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவே தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு குறைந்துள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும், உட்கொள்ள பரிந்துரைக்கப்படும் உப்பின் அளவு மாறுபடும்.

சிறுநீர் பரிசோதனையில் உடலில் உப்பு அதிகமாக உள்ளதா, குறைவாக உள்ளதா என்பது தெரியவரும்.

நீங்கள் எவ்வளவு உப்பு உட்கொள்கிறீர்கள் என்று கணித்துக் கொள்ள, உணவு உட்கொள்ளுதலை தொடர்ந்து பதிவு செய்து வரலாம் அல்லது உணவுப் பொருள்களின் லேபில்களைப் பார்த்து அதிலுள்ள சோடியம் அளவை கணக்கிடும் செயலியை பயன்படுத்தலாம்.

இரண்டுமே துல்லியமான முறைகள் அல்ல, எனினும் உப்பின் அளவை ஓரளவு கணித்துக் கொள்ள உதவும் என்கிறார் பேராசிரியர் காலின்ஸ்.

salt and relationships are the size of a handful 5354

salt and relationships are the size of a handful 5354

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்?

ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார்.

தினசரி உப்பின் அளவு அதிகமாக இருந்தால் கூட, அதனை குறைப்பது எளிதானதல்ல.

ரொட்டி, பாஸ்தா அல்லது வேறு ஏதாவது உப்பு குறைவான உணவை உட்கொள்ளுமாறு பேராசிரியர் காலின்ஸ் வலியுறுத்துகிறார்.

“நீங்கள் உணவு சமைக்கும் போது, உப்புக்கு பதிலாக மருத்துவ குணமுள்ள இலைகள் அல்லது மசாலா பொருட்களை சேர்க்கவும்” என்கிறார்.

salt and relationships are the size of a handful 5354

சந்தையில் கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு, லைட் உப்பு, சுப்பர் லைட் உப்பு என பல வகை உப்புகள் உள்ளன. எதனை தெரிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்பதில் முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 

மூன்று தசாப்தங்களுக்கு முன் உப்பு என்றால் வீதிகளில் விற்கப்படும் கல்லுப்பை எம்முடைய இல்லத்தரசிகள் வாங்கி சேமித்து அதனை பயன்படுத்துவார்கள்.

ஆனால் தற்போது ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட உப்பு என்றும், சுத்திகரிக்கப்பட்டு அதில் உள்ள சோடியம் அளவை குறைத்து, பொட்டாசியம் அளவை அதிகரித்து செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவையும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

salt and relationships are the size of a handful 5354

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

16 வயது மாணவர்கள் இருவர் விபத்தில் பலி

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்

ஐ.தே. கட்சி தொடர்பில் ஐ.ம.சக்தியின் செயற்குழுவில் தீர்மானம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular