complaints regarding child protection issues 5621
2024 ஆம் ஆண்டில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழுவுக்கு குழந்தை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அவற்றில் 580 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பானவை என அந்த ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இவற்றில், 321 முறைப்பாடுகள் குறிப்பாக குழந்தைகள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை.

2,746, குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளும் 1,950 குழந்தைகள் கொடுமை தொடர்பானவை.
42 முறைப்பாடுகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும், 25 வணிக நோக்கங்களுக்காக பாலியல் சுரண்டல் தொடர்பாகவும் பெற்றுள்ளது.
குழந்தை திருமணங்கள் தொடர்பான 14 முறைப்பாடுகளும், நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்துவது தொடர்பான 151 முறைப்பாடுகளும் இதில் அடங்கும்.
கூடுதலாக, தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் அடிமைத்தனம் குறித்து 120 முறைப்பாடுகளும் மற்றும் வயது குறைந்த கர்ப்பம் தொடர்பாக 53 முறைப்பாடுகள் கிடைப்பெற்றுள்ளன.
துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில், இலவச சட்ட சேவைகளை வழங்க தகுதிவாய்ந்த வழக்கறிஞர்கள் குழுவை நிறுவும் பணியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது.
குழந்தை துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆணைக்குழு கோரியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
complaints regarding child protection issues 5621

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!