Monday, February 10, 2025
HomeLocal NewsWeather Newsஇலங்கையில் காற்றின் தரம் பாதிப்பு - பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் காற்றின் தரம் பாதிப்பு – பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

Air quality Sri Lanka affected rain many areas 5613

தீவின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் 50 மிமீ-க்கு மேல் கனமழை பெய்யக்கூடும்.

மற்ற இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனி நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைப்பதற்காக பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேவேளை, புதிதாக உருவாகியிருந்த காற்று சுழற்சியானது மெதுவாக நகர்ந்து படிப்படியாக இலங்கையை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன்காரணமாக இன்று (29) ஓரளவு மழைக்கு சாத்தியம் உள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 28, 29, 30ஆம் திகதிகளில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது உள்ள வானிலை அமைப்பின்படி பெரும்பாலும் இன்றைக்கு மாத்திரமே மழைக்கு சாத்தியம் உள்ளது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு சீரான வானிலையே நிலவும்.

எனவே விவசாயிகள் நாளை 30ஆம் திகதிக்கு பின்னர் தமது அறுவடை நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஏற்கனவே உருவாகியிருந்த காற்று சுழற்சியானது இலங்கையின் தென்கிழக்காக தற்போது நகர்ந்து வருகின்றது..

இது இன்று (29) இலங்கைக்கு மேலும் நெருக்கமாக வந்து 30, 31ஆம் திகதிகளில் இலங்கையின் தென்புறமாக மேற்கு நோக்கி நகர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி 01, 02ஆம் திகதிகளில் மன்னார் வளைகுடாவின் தென் புறமாக குமரி கடல் நோக்கி நகரும்.

இது எதிர்வரும் 03ஆம் திகதி மாலைதீவை அடைந்து, 04ஆம், 05ஆம் திகதிகளில் மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்.

இதன் காரணத்தினால் இன்று (29) முதல் இலங்கையின் தென்பகுதிகளிலும் (அம்பாந்தோட்டை), இலங்கையில் அரை தென்பகுதிகளிலும் (அனுராதபுரத்திற்கு தெற்காக உள்ள இலங்கையின் தென்பகுதிகள்) சிலவற்றிலும், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னர் பெரும்பாலும் இலங்கையில் அநேகமான பிரதேசங்களிலும் ஓரளவு (ஓரளவு) மழைக்கு சாத்தியம் உள்ளது.

இதேவேளை எதிர்வரும் 06ஆம், 07ஆம், 08ஆம் திகவியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையை நெருங்கி வர இருக்கின்றது.

Air quality Sri Lanka affected rain many areas 5613

இந்தநிலையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்கள எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்காரணமாக, வௌிக்கள பணிகளை மேற்கொள்ளும் தரப்பினர் பாதுகாப்பு முகவுறைகளை அணிந்து கொள்ளுமாறும், ஏனைய தரப்பினர் வௌியக பணிகளை குறைத்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளனர்.

கீழ்வரும் அட்டவணைகளில் காற்றின் தரம் குறித்த தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

வட மாகாணம் மற்றும் தென்னிலங்கையின் குறிப்பிடத்தக்க இடங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு கோட்டுக்கு மேல் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Air quality Sri Lanka affected rain many areas 5613
Air quality Sri Lanka affected rain many areas 5613
Air quality Sri Lanka affected rain many areas 5613

Air quality Sri Lanka affected rain many areas 5613

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular