bus service between chengaladi mavilara 4756
கடந்த 30 வருடங்களுக்கு பின்பு புதிய அரசாங்கத்தினால் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினுடாக செங்கலடி மாவிலாறு பேருந்து வசதி ஆரம்பித்துவைக்கப்பட்டது.


புதிய அரசாங்கத்தினால் நேற்று நாடளாவிய ரீதியில் கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் எண்ணக் கருக்கமைய கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் திட்டத்தின் ஒரு கட்டமாக போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதே வேளை நேற்று சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் புதிய அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபுவினால் சேவை மக்களுக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டது
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப் பிரதேசத்தில் கடந்த பல வருடங்களாக நிரந்தரமான ஒரு போக்குவரத்து வசதி இன்றி மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்




இவ்விடயம் சம்பந்தமாக கந்தசாமி பிரபு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து புத்தாண்டில் மட்டக்களப்பு செங்கலடி மாவிலாறு பகுதிக்கு பொது மக்களுக்கான இந்த போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இப் பிரதேசத்துக்கு பொது போக்குவரத்து வசதிகள் இல்லை,என்பது குறிப்பிடத்தக்கது.
அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!
பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?
இறக்குமதியாகும் அரிசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விநியோகம்!
நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர், ஏறாவூர் சாலை முகாமையாளர், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,செங்கலடி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
bus service between chengaladi mavilara 4756

இதையும் படியுங்கள்
2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!
பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!
அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!
புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்
