Friday, February 7, 2025
HomeLocal Newsவன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

வன்முறை இல்லாத தேர்தல் உருவாகி வருகிறது!

a violence free election is emerging 2866

ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளிலும்,

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும் போது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த பொதுத்தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.

சட்டவிரோத தேர்தல் பிரசாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகின்றது.

இவற்றை நாம் கண்காணிக்கும் போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறு பூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரசாரங்கள், நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது”என்றார்.

a violence free election is emerging 2866

இதையும் படியுங்கள்

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

கங்குவா படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி!

வாகன வரி மோசடி 10 கோடி இழப்பு!

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

புதிய பயிற்சி நிலை வைத்தியர்கள் நியமனங்கள்!

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று

தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்று

ரூ.23 லட்சம் சம்பளம் கொடுத்து புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்க்கும் அமெரிக்க நகரம்

மெக்ஸிகோ, அமெரிக்க அதிபர் தேர்தல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular