Monday, February 10, 2025
HomeTop Storyமேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

மேலுமொரு கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி!

srilanka cricket team won hong kong cup 2832

ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 3 விக்கட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 6 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பாக மொஹமட் அக்லக் 48 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க மற்றும் தனஞ்சய லக்‌ஷான் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 73 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சந்துன் வீரக்கொடி 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக 2024 ஹொங்கொங் சிக்சர்ஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை இலங்கை அணி 17 வருடங்களுக்கு பின்னர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

srilanka cricket team won hong kong cup 2832

இதையும் படியுங்கள்

அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு

காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது

புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்

தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!

நட்சத்திர ஹோட்டல்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் கடிதம்!

சோடியம் பைகார்பனேட் ஊசிகளுக்கு தட்டுப்பாடு!

லொஹான் ரத்வத்தவுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு புத்தகம் வாங்க கொடுப்பனவு

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இப்படியே போனால் KDU பஸ் போன்று ஆகிவிடும்

இப்படியே போனால் KDU பஸ் போன்று ஆகிவிடும்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று!

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று!

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular