Saturday, August 30, 2025
HomeLocal News2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!

2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!

first session parliament 2025 january 7th 4771

நாடாளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (31) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய ஜனவரி 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக (5 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

பழைய மீன்களை காட்டு பகுதியில் வீசிய போது சிக்கியவர்கள்?

இறக்குமதியாகும் அரிசி கூட்டுறவு நிறுவனங்களுக்கு விநியோகம்!

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஆறு கட்டளைகள், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதிக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன. இதற்கு அமைய மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் ரவ டியூடர் குணசேகர ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகளுக்காக அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.

first session parliament 2025 january 7th 4771

இதையும் படியுங்கள்

2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?

தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!

பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!

பால் சோறு சமைக்க அரிசி இல்லை!

அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

பார்க்கர் சோலார் புரோப், நாசா

சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் – அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular