77 killed in fuel lorry explosion in nigeria 5441
நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று வட மத்திய நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மக்கள் எரிபொருளை சேமிக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் லொறி வெடித்துள்ளது.
இதில் 77 உயிரிழந்ததுடன், மீட்பு பணியாளர்கள் உள்ளிட்ட 25 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நைஜீரியாவில் எரிபொருள் லொறி வெடிப்புகள் மற்றும் விபத்துக்கள் பொதுவானவை என கூறப்படுகிறது.
பெரும்பாலும் வீதிகளின் மோசமான நிலை மற்றும் மோசமாக பராமரிக்கப்படும் வாகனங்கள் காரணமாக இவ்வாறான விபத்துகள் ஏற்படுகின்றன.
நேற்று நடந்த வெடிப்பில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் கடந்த மாதங்களில் இதே போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, எண்ணெய் வளம் மிக்க டெல்டா மாநிலத்தில் எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் கடந்த ஒக்டோபரில் கசிந்த பெட்ரோலை சேகரிக்க முயன்ற போது ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 153 பேர் உயிரிழந்தனர்.
நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபுவின் நீண்டகால எரிபொருள் மானியங்களை நீக்குவது உட்பட, அவரது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களில் எரிபொருட்களின் விலைகள் 400 வீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளன.
இந்த மாற்றங்கள் மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் தள்ளியுள்ளதுடன், பலர் உயிர்வாழ்வதற்கான அவநம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் தனது கொள்கைகள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
77 killed in fuel lorry explosion in nigeria 5441

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

இன்றும் பல ரயில்கள் சேவையில் இல்லை
