shooting incident front viyazhendrans house 4815
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.ஜ.டியினரால் கொலை குற்றத்தின் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக பொலிஸார் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்ததுடன் உயிரிழந்தவரின் பெற்றோரும் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது… ஆணைக்குழு கவனம் செலுத்துகிறது!
தீவிர சிகிச்சையில் இருந்த தாயும் உயிரிழப்பு!2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!Trump Hotel-லுக்கு அருகில் வெடித்த எலான் மஸ்கின் தயாரிப்பு!
2025இல் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 7ஆம் திகதி!
இந்நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கொலை குற்றத்தின் அடிப்படையில் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் நேற்று (2) கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சி.ஜ.டியினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரு வருடத்தின் பின்னர் நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் 3 வருடத்திற்கு பின்னர் சந்தேகத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
shooting incident front viyazhendrans house 4815
இதையும் படியுங்கள்
2025 புத்தாண்டில் உலக மக்கள் தொகை?
வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது?
தோற்கடிக்கப்பட்டவர்களை விலத்தி வையுங்கள் – கஜேந்திரகுமார்!
பிரபாகரனுடன் மஹிந்த பேச்சுவார்த்தைக்கே முயன்றார் – உயிராபத்து என்பது பொய்!
அரகலய போராட்டம் தொடர்பில் சவேந்திர சில்வா சர்ச்சை கருத்து!
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 30,000 மெற்றிக் தொன் உப்பு