தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து பங்களாதேஷின் நட்சத்திர வீரர் ஷகீப் அல் ஹசன் பாதுகாப்பு காரணங்களினால் விலகியுள்ளார்.
தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இன்று ஆரம்பமாகும் முதல் டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற ஷகீப் அல் ஹசன் தற்போது விலகியுள்ளார்.
அண்மையில் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையின் போது ஷகீப் அல் ஹசனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. அதன் காரணமாக அவர் வெளிநாட்டிற்கு சென்றார். அதன் பின்னர் அவர் சொந்த நாடு திரும்பவில்லை. தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சகீப்புக்கு எதிராக நிலவி வரும் சூழ்நிலை காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 23 வயதான ஹசன் முராத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Shakib pulled out of the first Test due to safety concerns