Sunday, February 16, 2025
HomeTop Storyஅமைச்சர் சரோஜா : பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரானார்!

அமைச்சர் சரோஜா : பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரானார்!

Minister Saroja president Women Parliamentarian Union 3796

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் நாடாளுமன்றத்தில் கூடியது.

இதில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர, நாடாளுமன்ற செயலாளர் நாயகமும், ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.

அவருடைய பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அனுஷ்கா திலகரத்ன வழிமொழிந்தார்.

அத்துடன், பெண் நாடாளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களாக இருவர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி பண்டார கிரிஎல்லே பிரதி இணைத்தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இவருடைய பெயரை ரோஹினி விஜேரத்ன முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க வழிமொழிந்தார்.

மேலும் மற்றுமொரு பிரதி இணைத்தலைவராகப் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தெரிவுசெய்யப்பட்டதுடன், அவருடைய பெயரைப் நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே வழிமொழிந்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், பொதுமக்களின் வாக்குகளால் குறிப்பிடத்தக்க வீதமான பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது சிறந்த வெற்றியாகும் என்றார்.

எனவே, அரசியல் வேறுபாடுகள் இன்றி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவது ஒன்றியத்தின் நோக்கம் என இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.

அத்துடன், ஒன்றியத்தால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இரு துணைத் தலைவர்கள் தலைமையில் உபகுழுவொன்று அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்னவின் பரிந்துரைக்கு அமைய பாலின அடிப்படையில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான தினத்தை எதிர்வரும் 06ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி விஜேரத்ன, சமன்லி குணசிங்க, சமிந்திரானி பண்டார கிரிஎல்லே, தீப்தி வாசலகே, துஷாரி ஜயசிங்க, ஒஷானி உமங்கா, கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, லக்மாலி ஹேமச்சந்திர, கீதா ஹேரத், ஹிருனி விஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, சாகரிக்கா அதாவுத, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, நிலூஷா லக்மாலி கமகே, ஏ.எம்.எம்.எம். ரத்வத்தை, நிலாந்தி கொட்டஹச்சி, ஹசாரா லியனகே, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Minister Saroja president Women Parliamentarian Union 3796

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

77 வது சுதந்திர தினத்தை ஏற்பாடு செய்ய விசேட குழு

பாராளுமன்றில் வைத்து தாக்கப்பட்ட அர்ச்சுனா!

இராணுவ புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்!

திருவண்ணாமலை நிலச்சரிவு: மகளின் உடலைக் காண முடியாது கதறி அழுத தாய், பறிபோன சேமிப்புகள் – பிபிசி கள ஆய்வு

திருவண்ணாமலை நிலச்சரிவு

பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு – தாக்குதல் நடத்தியது யார்?

பஞ்சாப்: பொற்கோவில் வாசலில் முன்னாள் துணை முதல்வர் மீது துப்பாக்கிச்சூடு – உயிர் தப்பியது எப்படி?
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular