Friday, February 7, 2025
HomeLocal NewsPolitical Newsபாராளுமன்றில் வைத்து தாக்கப்பட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் வைத்து தாக்கப்பட்ட அர்ச்சுனா!

arjuna was attacked in parliament 3770

பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கான நேர ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசாரிக்க சென்ற போது இவ்வாறு தன்னை தாக்கியதாக அவர் முறையிட்டுள்ளார்.

‘ இன்று 2.30 மணியளவில் நான் எதிர்க்கட்சித் தலைவரின் அறைக்குச் சென்றேன். இதன்போது நான் கேட்டேன். இந்த நேர ஒதுக்கீடு எவ்வாறு இடம்பெறுகிறது என்று. இன்றைய நாள் எனக்கு எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. நாளை எனக்கான நேரம் இருக்கிறதா? இல்லையா? என கேட்க சென்றேன்.

3 வருடங்களாக தீவு ஒன்றில் சிக்கித் தவித்த 60 இலங்கைத் தமிழர்கள்!

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம்!

ஆசியாவின் போஷாக்கு தன்மை மேம்பாட்டு மாநாடு!

அங்கே அதிகாரிகள் இருந்தனர். மற்றைய அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். நாளை பிற்பகல் எனக்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர்கள் எனக்கு கூறினார்கள். இந்த வரிசையை எப்படி செய்கிறீர்கள் என நான் கேட்டேன். பின்னர் சுஜித் என்ற நபரிடமும் மற்றொரு நபரிடம் சென்று பேச சொன்னார்கள்.

அவர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றனர். அவர்கள் நினைந்தவாறு தீர்மானிக்க முடியாது. கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறினேன். இதன்போது சுஜித் என்ற நபர் என்னை தாக்கினார். என்னை தாக்க முடியாது. இவருக்கு என் தந்தையின் வயது. இவரை தாக்கி நானே சீபிஆர் செய்ய வேண்டி வரும். அதனால் தாக்கவில்லை.’

இவ்வாறு தனது ஆதங்கத்தை வௌிப்படுத்தியுள்ளார். எனினும் சபை முதல்வர் அர்ச்சுனாவை சபாநாயகரிடம் முறையிடும்படி கூறியமை குறிப்பிடத்தக்கது.

arjuna was attacked in parliament 3770

இதையும் படியுங்கள்

அம்பாறை விபத்து – அதிபர், ஆசிரியர் விளக்கமறியலில்!

யாழ். ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல் வரை

வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு!

ஆழ்ந்த தாளமுக்கத்தின் தற்போதைய நிலை!

கரையை கடக்கும் புயல்..! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை..!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அனுமதி!

அமைச்சரவை தீர்மானங்கள் – நேரலை

அமைச்சரவை தீர்மானங்கள் - நேரலை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular