muslim congress given nothing muslims 6179
முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் தராத, காணிகளை மீட்க திராணியற்ற, கல்முனை நகர அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்து நான்காண்டுகளாக சிந்தித்து கொண்டிருந்து இப்போது அங்கிருந்து வெளியேறியிருக்கிறேன். என்னுடைய பிரதிப்பொருளாளர் பதவி அடங்களாக கட்சியின் பதவிகளை இதுவரை துறக்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரும்பினால் என்னை நீக்கிக்கொள்ளட்டும் என ஐக்கிய மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் ஏ. சி.எஹியாகான் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் ஐக்கிய மக்கள் காங்கிரஸின் அலுவலகத்தை இன்று (23) திறந்து வைத்து விட்டு ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் அமைச்சராக இருந்தும் கல்முனைக்கு எவ்வித அபிவிருத்திகளும் நடக்கவில்லை. கல்முனையை அபிவிருத்தி செய்ய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் எடுத்த எத்தனங்களை அவர்களே தடுத்தார்கள். கடந்த பொதுத்தேர்தலிலும் தங்களின் ஆமாம் சாமிகள் அவர் கூட தேர்தலில் களமிறங்கினால் அவர்கள் தோற்று ஹரீஸ் வென்றுவிடுவார் என்பதற்காக ஹரிஷை தேர்தலில் களமிறங்க விடாமல் சதி செய்து தடுத்தார்கள். இந்த முஸ்லிம் காங்கிரஸில் யாரும் மக்களை பற்றி சிந்திக்க முடியாது. அவ்வாறு சிந்தித்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள்.

கூஜா தூக்கிகளுக்கு சாமரம் வீசும் வேலையை செய்வதையே முஸ்லிம் காங்கிரஸ் தலையாய கடமையாக கொண்டுள்ளது. இதனால் தான் மக்கள் அவர்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் இன்னும் பல பாரம்பரிய கட்சிகளையும் நிராகரித்து தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரண்டார்கள். நாங்களும் அவர்களுக்கு தேவையாயின் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொகுதிக்கு கிடைத்த தேசிய பட்டியல் எம்.பிக்கு ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம். எங்களுடன் ஒன்றாக இருந்த துரோகிகள் எங்களை பல இடங்களில் காட்டிக்கொடுத்து பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்.
கனேமுல்ல சஞ்சீவவின் கொலையாளிக்கு பல பெயர்கள்!
மீனகாய ரயிலுடன் மோதி யானைக் கூட்டம் பலி – போக்குவரத்து பாதிப்பு!
கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும் திருகோணமலை உட்பட இன்னும் சில மாவட்டங்களிலும் நாங்கள் களமிறங்க தயாராகி வருகிறோம் என்றார்.
muslim congress given nothing muslims 6179

இதையும் படியுங்கள்
மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!
கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!
கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு
சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!
சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!
தேசிய பாதுகாப்பு தொடர்பில் கற்றுக் கொண்டிருக்கும் அரசாங்கம்!
யாழ். மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து