Wednesday, March 26, 2025
HomeLocal Newsகணேமுல்ல சஞ்சீவவுடன் மோதல் - முட்டுக்காலில் இருத்தி சுட்டுக் கொல்லப்பட்ட நபர்!

கணேமுல்ல சஞ்சீவவுடன் மோதல் – முட்டுக்காலில் இருத்தி சுட்டுக் கொல்லப்பட்ட நபர்!

Man shot dead standoff with Ganemulla Sanjeeva 6175

ஜா – எல, உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோர்கன்வத்த கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்கள் சிலர் கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரை மண்டியிட வைத்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”படுவத்தே சாமர” என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று, துபாயில் உள்ள “இஷார” என்பவர் உயிரிழந்த நபரின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அவரை உஸ்வெட்டகெய்யாவ, மோர்கன்வத்த கடற்கரை பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

பின்னர், உயிரிழந்த நபர் முச்சக்கரவண்டியில் உஸ்வெட்டகெய்யாவ, கடற்கரை பகுதிக்கு சென்றிருந்த போது இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையாளிக்கு பல பெயர்கள்!

மீனகாய ரயிலுடன் மோதி யானைக் கூட்டம் பலி – போக்குவரத்து பாதிப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

துப்பாக்கிதாரிகள் T – 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளதாகவும், குறித்த நபர் மீது 10 தடவைகள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”படுவத்தே சாமர” என்பவருக்கும் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”என்பவருக்கும் இடையில் போதைப்பொருள் தகராறுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”படுவத்தே சாமர” என்பவரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Man shot dead standoff with Ganemulla Sanjeeva 6175

இதையும் படியுங்கள்

மருமகன் பொல்லால் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் படம் வௌியானது!

கடவுச்சீட்டுகளை ஒப்படைக்குமாறு இராணுவ வீரர்களுக்கு அறிவிப்பு

சினிமா பாணியில் நீதிமன்றுக்குள் நுழைந்துள்ள துப்பாக்கிதாரி – கொலையுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

சஞ்சீவ கொலை, துப்பாக்கிதாரி தொடர்பில் மற்றொரு தகவல்- பிரதான சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்!

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ – விசாரணைகளை திசை திருப்ப பாதாள உலகக் குழுக்கள் முயற்சி – புலனாய்வுத் தகவலை வெளிப்படுத்திய அரசு

“உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்“ – விசாரணைகளை திசை திருப்ப பாதாள உலகக் குழுக்கள் முயற்சி – புலனாய்வுத் தகவலை

தையிட்டியில் விகாரை கட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்பு – அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்

தையிட்டியில் விகாரை கட்டப்பட்டுள்ள காணி மனித புதைகுழியாக இருப்பதற்கான வாய்ப்பு – அருட்தந்தை மா.சத்திவேல் சந்தேகம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular