mahinda rajapaksshas security officers reduced 2768
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனக் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைவாக விசேட பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சிபாரிசுகள் அடங்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மீண்டும் நீண்ட வரிசை – குழப்பநிலையும்…
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
இதன்படி, மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 60 அதிகாரிகள், 2 ஜீப் வாகனங்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.
இதுதவிர மேலதிகமாக அதிகாரிகள் இருந்தால் நாளை (2) அந்த பிரிவுக்கு பொறுப்பான டி.ஐ.ஜி.யிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும், வழங்கப்பட்ட வாகனங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் அவற்றை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
mahinda rajapaksshas security officers reduced 2768
இதையும் படியுங்கள்
அழகுசாதன பொருட்கள் குறித்து கவனமாக இருக்குமாறு
காலி வீதியில் நான்கு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளது
புதிய அரசாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதியின் அறிவித்தல்
தேசிய மக்கள் சக்தியினரிடம் 8 அம்சக் கோரிக்கைகள்!
முக்கிய செய்திகள்
சென்னை: 85% சதுப்பு நிலங்கள் அழிந்துவிட்டதாக கூறும் உலக காட்டுயிர் நிதியம் – விளைவுகள் என்ன?
