discussion president and indian business representatives 4196
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.
16ஆம் திகதிக்கான வானிலை விசேட முன்னறிவிப்பு!
பொலன்னறுவையில் இருந்து அடுத்த சபாநாயகர்!
வெள்ளவத்தையில் பெருந்தொகை பணத்துடன் சிக்கிய இளைஞர்கள்!
கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்!
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.
தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்.
discussion president and indian business representatives 4196

இதையும் படியுங்கள்
ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!
யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
விஜித்த ஹேரத்தின் அமைச்சு செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு?
இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?

நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர்போன ‘கோட்டா கோச்சிங் தொழில்’ வீழ்ச்சி அடைகிறதா?
