Monday, February 10, 2025
HomeLocal Newsஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் - பலரை நாடு கடத்த நடவடிக்கை!

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

Deportation woman violated agreements deport many 4108

இஸ்ரேலில் இருந்து 17 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழில் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.

விவசாயத் துறைக்கான தொழில் வீசாவில் இஸ்ரேலுக்கு சென்றவர்கள அந்தப் பணியிடங்களிலிருந்து தப்பிச் சென்று வேறு வெதுப்பகங்கள், விருந்தகங்களில் பணிபுரியும் போது உள்ளூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – வெளிநாட்டு பணியாளர்களை தொடர்ந்து கண்காணித்து வரும் நாடு எனவும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுப் பணியாளர்கள் இஸ்ரேலில் பணிக்கு வந்த பின்னர் அவர்களது வீசா வகையை வேறு வீசா வகைக்கு மாற்றுவதற்கான சட்டம் இல்லையென இஸ்ரேல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, தாதியர் பணிக்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்ற இலங்கைப் பெண் ஒருவரும் சேவை நிபந்தனைகளை மீறியதன் காரணமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக திருட்டு குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையர் ஒருவரை நாடு கடத்த இஸ்ரேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Deportation woman violated agreements deport many 4108

இதையும் படியுங்கள்

கணவனை ஏமாற்றிய போலி மனைவி!

வாகன இறக்குமதிக்கு அனுமதி – அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள்!

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு!

கொப்பரை தேங்காய் இல்லாததால் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் வியாபாரம்!

தந்தை வெட்டிய மரம் வீழ்ந்து மகன் உயிரிழப்பு!

தாய்லாந்தில் பதக்கங்கள் வென்ற 7 வயது மாணவி!

கைதிக்கு கைவிலங்கு சாவியை கையளிக்க வந்த நபர் கைது 

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்

காணொளி,ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண், கால அளவு 3,49

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular