Wednesday, March 26, 2025
HomeLocal Newsஅரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலான கோரிக்கை!

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலான கோரிக்கை!

Demand regarding salaries government employees 5963

2025 வரவு செலவு திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் வைத்தியர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று (11) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,” அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் 20ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த அரசாங்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்கள், அதனை இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்கள் மற்றும் சேவை கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளை கருத்திற்கொள்ளும் போது அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

புதிய அரசாங்கம் நியமிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டுக்குள் பணவீக்க நிலைமையை கருத்திற்கொண்டு 25ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு அரச துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க போராட்டம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கி செயற்பட்டுவந்த மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க தலைவர்கள் தற்போது அமைச்சுப்பதவி வகித்து வருகின்றனர்.

10 நாட்களில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் புதிய திட்டம் ஆரம்பம்!

சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்!

இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைப்பு!

வழமைக்கு திரும்பும் மின்விநியோகம் – காரணம் இதுதான்!

அதனால் அவர்களின் அமைச்சுப்பதவியை உயர்வாக கருதி அரச ஊழியர்களின் சம்பளத்தை 20ஆயிரம் ரூபாயால் அதிகரிக்குமாறு கோருகிறோம்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி 7அம்ச கோரிக்கை ஒன்றை பொது சேவை தொழிசங்க சம்மேளனம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் முன்வைத்திருக்கிறது.

அதில் நீண்டகாலமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்காமல் இருப்பது தொடர்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

மேலும் நாட்டின் மொத்த தொழிலாளர்களின் பெரும்பான்மை ஊழியர்கள் அரசசார்பு மற்றும் தனியார் துறைகளிலே இருந்து வருகின்றனர்.

தற்போதுள்ள பணவீக்க நிலைமையில் அவர்களின் தனிப்பட்ட பொருளாதாரம் விழ்ச்சியடைந்துள்ளதுடன் 2023 குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கைக்கு அமைய 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 66,000 ரூபாவுக்கும் அதிகமாகும்.

இந்த அறிக்கையை கருத்திற்கொண்டு அரச சார்ப்பு மற்றும் தனியார் துறையின் அடிப்படை சம்பளத்தை 50ஆயிரம் ரூபாயாக்குமாறு கோருகின்றோம்.

குறித்த கோரிக்கைகளுடன் அரச ஊழியர்களின் கொடுப்பனவு, அவர்களின் சம்பள முரண்பாடு, அரச துறைக்கு இணைத்துக்கொள்ளல் மற்றும் பதவி உயர்வு மற்றும் அரச சொத்துக்கள விற்பனை செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் எமது யோசனையை ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறோம்.”என கூறியுள்ளார்.

Demand regarding salaries government employees 5963

இதையும் படியுங்கள்

கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!

மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!

பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை

வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular