Wednesday, March 26, 2025
HomeTop Storyதுறைமுகப் பகுதியில் சட்ட விரோத காணி அபகரிப்பு - முறுகலின் பின் வந்த சாணக்கியன்!

துறைமுகப் பகுதியில் சட்ட விரோத காணி அபகரிப்பு – முறுகலின் பின் வந்த சாணக்கியன்!

Chanakya came illegal land grabbing scandal port area 4432

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று (24) வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப்பகுதிக்கு திடீர் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

துறைமுகப் பகுதியில் நிலவும் சட்ட விரோத காணி அபகரிப்பு தொடர்பாக பிரதேச மீனவ அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்ததனை அடுத்து நில​ைமைகளை கண்டறியும் பொருட்டு நேரில் சென்று பார்வையிட்டார்.

துறைமுகப் பகுதியின் அருகாமையில் உள்ள ஆற்றோர அரச காணி ஒன்றினை மீனவர்கள் தங்களது நாளாந்த போக்குவரத்து மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் மற்றும் படகு நிறுத்தும் செயற்பாட்டிற்கு இடையூறாக உள்ள வகையில் முன்னாள் பிரதேச அரசியல்வாதி ஒருவரின் சகோதரர்களில் ஒருவர் ஆற்றோடு சேர்த்து வேலிக் கட்டைகள் இட்டு அடைத்துள்ளதாகவும் அடைக்கப்பட்ட கட்டைகளை அகற்றி தருமாறும் மீனவ அமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

சம்பவத்தை கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பான பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

ஆற்றங்கரையோடு உள்ள காணிகளின் குறிப்பிட்டளவு பிரதேசம் அரசிற்கு சொந்தமானதாகவும் அவற்றினை தனியார் அபகரிக்கமுடியாது.

ஆனால் அதனை பராமரிக்கலாம் வேலி இடவோ, மதில் கட்டவோ முடியாது என்றார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக மீனவ அமைப்பு பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இவ்வாறு கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை முன்னாள் அரசியல்வாதியின் சகோதரர் அவரது அடியாட்களுக்கும் மீனவர் சிலருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

மகிந்த ராஜபக்சவிற்கு ISIS அமைப்பினால் ஆபத்து!

சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த மூன்று மறுசீரமைப்புகள் மிக அவசியம் – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு!

குறித்த காணி பிணக்கு தொடர்பாக கரையோர பேணல் திணைக்களத்திற்கு முறைப்பாடு தெரிவித்தனை அடுத்து அவர்கள் கடந்த வாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நில​ைமைகளை அவதானித்தன் பின்னர் அடைக்கப்பட்ட கட்டைகள் சிலவற்றை அகற்றவேண்டும் என தங்களிடம் தெரிவித்ததாக மினவ அமைப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தங்களது காணியின் கட்டைகள் சிலவற்றை மீனவர்கள் சிலர் இரவோடு இரவாக அகற்றியதாக குற்றம் சுமத்தி அவர்களுக்கெதிராக முறைப்பாட்டினை கல்குடா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

அது தொடர்பான விசாரணையை பொலிசார் முன்னெடுத்து தாம் செய்யாத குற்றச் செயலை செய்தாக தங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்படி விடயங்களை கவனத்திற் கொள்ளும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு இன்று வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..

Chanakya came illegal land grabbing scandal port area 4432

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம்

ஜனாதிபதி அநுரவுக்கு மனோ கணேசன் எம்.பி அவசர கடிதம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular