assessment fields affected unusual weather 4425
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட மழையுடன் கூடிய வானிலை காரணமாக பெய்த அடை மழை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை கணிப்பிடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட படுவான்கரை பகுதியில் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களில் சேத விவரங்கள் பற்றிய கள ஆய்வு விஜயம் இன்று இடம்பெற்றது.
வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பழுகாமம் கமநல சேவை பிரிவு பெரிதும் பாதிக்கப்பட்ட இனிப்பட்டி வெளி விவசாயக் கண்டம் கொழும்பில் இருந்து வருகை தந்த கமதொழில் – கமநல காப்புறுதி உத்தியோஸ்தர் குழுவினால் சென்று பார்வையிடப்பட்டு சேத விபரங்கள் ஆய்வு செய்து கணக்கிடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


பழுகாமம் கமநல சேவை பிரிவில் 2506 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது இருப்பினும் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் இனிப்பட்டி வெளி விவசாயக் கண்டத்தில் சுமார் 1000 ஏக்கர் பாதிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மகிந்த ராஜபக்சவிற்கு ISIS அமைப்பினால் ஆபத்து!
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த மூன்று மறுசீரமைப்புகள் மிக அவசியம் – ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு!
இந்தக் கள விஜயத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களம் மற்றும் கமநல சேவை நிலைய உயர் அதிகாரிகள் விவசாய அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
assessment fields affected unusual weather 4425
