Saturday, March 15, 2025
HomeLocal Newsகிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சி!

கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சி!

attempted kidnapping journalist tamilselvan kilinochchi 4511

கிளிநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வனை கிளிநொச்சி நகரில் வானில் கடத்தும் முயற்சியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நடந்தேறியுள்ளது.

கடமை நேரத்தின் பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த தமிழ் செல்வனை பின்தொடர்ந்து வந்திருந்த வான் யாழ்.-கண்டிவீதியில் வழிமறித்து கடத்தலை முன்னெடுக்க முற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பித்து செல்ல முயன்ற வேளை அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்ட தமிழ்செல்வன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவுக்கு எதிராக சாட்டையடி போராட்டம் : அண்ணாமலை!

மதுபோதையில் வாகனம் செலுத்தல் – பொலிஸாரின் தீர்மானம்!

வன்னியில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் அழிப்பு மற்றும் பரவி வரும் போதைபொருள் கடத்தல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் தமிழ் செல்வன் தகவல் அறியும் சட்டமூலம் தகவல்களை பெற்று பல ஊழல்களை அம்பலப்படுத்தும் முன்னணி ஊடக செயற்பாட்டளாராகவும் உள்ளார்.

இதனிடையே தமிழ் செல்வன் கடத்தல் முயற்சியை வன்மையாக கண்டித்துள்ள யாழ்.ஊடக அமையம் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் ஊடக அமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

இதேவேளை கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் சாரதியை அடையாளம் காண்பிக்க தயாராக இருப்பதாக தமிழ் செல்வன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

attempted kidnapping journalist tamilselvan kilinochchi 4511

இதையும் படியுங்கள்

ஒப்பந்தங்களை மீறிய பெண் நாடு கடத்தல் – பலரை நாடு கடத்த நடவடிக்கை!

யாழில் எலிக்காய்ச்சலால் பிறிதொருவர் உயிரிழப்பு- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லொறி – மூன்று சிறுவர்கள் பலி!

செல்ஃபி மோகத்தால் பலியான தாயும், மகளும் – அனுராதபுரத்தில் சம்பவம்!

கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு

கொலையில் முடிந்த இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

டிப்பர் வாகனத்தில் சிக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular