ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரையிலான நேரம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது பிரம்ம கணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
பலரும் நன்றாக உறங்கி கொண்டிருக்கும் போது, திடீரென அதிகாலை நேரத்தில் முழித்து கொள்வார்கள். ஆனால் இந்த நேரத்தில் திடீரென எழுவதால் பலரும் பீதியடைவார்கள். ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது என்று ராஞ்சியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சந்தோஷ் குமார் சௌபே கூறியுள்ளார்.
உண்மையில், பல இயற்கை சக்திகள் இந்த நேரத்தில் நம்முடன் இணைக்க முயற்சி செய்கின்றன. இந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர் சந்தோஷ்குமார் தெரிவித்துள்ளார். உண்மையில், இந்த நேரம் நேர்மறை ஆற்றலால் நிரப்பப்படுகிறது. இதை சரியாகப் பயன்படுத்தினால் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். எனவே இந்த நேரத்தில் தூங்காமல் நல்ல முறையில் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.
எழுந்தவுடன் படுக்கையில் இருந்து உட்கார வேண்டுமாம். பிறகு நமது இஷ்ட தெய்வத்தை தியானித்து வழிபடவேண்டுமாம். ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் வழிபாடு பல மடங்கு பலனை கொடுக்குமாம். இது போன்று செய்ய முடியாதவர்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை உச்சரித்தால் மட்டுமே போதுமானதாகும். அதே பலன் கிடைக்குமாம்.
இந்த நேரத்தை, சரியாகப் பயன்படுத்தினால், நம் வாழ்வில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். இது நமக்கு செழிப்பு, மரியாதை மற்றும் கௌரவத்தை கொண்டு வர முடியும். எனவே, பிரம்ம கணத்தில் ஒருவர் எழுந்தால், அதை சுப சகுனமாகக் கருத வேண்டும். இந்த நேரத்தை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும்.