Monday, February 10, 2025
HomeBusiness Newsபசுமை பிணையப் பத்திரத்தில் முதலீடு செய்ய தயாராகும் செலிங்கோ லைஃப்!

பசுமை பிணையப் பத்திரத்தில் முதலீடு செய்ய தயாராகும் செலிங்கோ லைஃப்!

செலிங்கோ லைஃப் நிறுவனமானது சக்திமிகு முதலீட்டாளராக இலங்கையின் முதலாவது பசுமை பிணையப் பத்திரத்தில் (Green Bond) ரூ. 2 பில்லியனை முதலீடு செய்வதன் மூலம், நிலைபெறுதகு தன்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

DFCC வங்கியினால் விநியோகிக்கப் படவுள்ள இந்த பசுமைப் பத்திரமானது, இலங்கையின் நிலத்தடி, மிதக்கும், மேற்கூரை சூரிய ஒளிமின்னழுத்த (PV) மின் உற்பத்தி வசதிகளை நிறுவுதல், கையகப்படுத்துதல், விரிவாக்கம் செய்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல் ஆகியவற்றிற்கு நிதியளிப்பதற்காக 2.5 பில்லியன் ரூபா வரை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்த மைல்கல்லான முதலாவது பசுமை பிணையப்பத்திர விநியோகத்தில் பங்குபெற்றுவதை நிலைபெறுதகு தன்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பாகவும் இலங்கையில் உள்ள பெருநிறுவனத் துறைக்கு எடுத்துக்காட்டுவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் நாங்கள் கருதுகிறோம்’ என்று செலிங்கோ லைஃப் தலைவர் திரு. ஆர். ரெங்கநாதன் கூறினார். ‘மேலும் செலிங்கோ லைஃப்பிற்கு இது ஒரு தர்க்கரீதியான முதலீடாகவும் பசுமை முதலீட்டு பிரிவில் ஒரு முன்னோடியாகவும் தொடர்கிறது.’ நீடித்த நிலைபெறுதகு தன்மை தொடர்பான செயற்பாடுகளை நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது அதன் ஒரு கட்டமாக நிறுவனத்தின் கார்பன் தடயத்தை 5மூ குறைக்கும் என வருடாந்த இலக்காக நிர்ணயித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், செலிங்கோ லைஃப் தனது கார்பன் தடத்தை 9.33மூ ஆல் 3,337 tCO2e ஆகக் குறைத்தது, இது காகிதப் பயன்பாடு, சக்தி மற்றும் எரிபொருள் நுகர்வு அளவுகளில் தொடர்ந்து கவனம் செலுத்துதல் மற்றும் கண்காணித்தல் போன்ற பரந்த அளவிலான முயற்சிகளினால் ஏற்பட்ட பாராட்டத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. மேலும் பலாங்கொடையில் உள்ள ரஜவக வனப் பகுதியில் காடு மீள்வளர்ப்பு முயற்சியை ஆரம்பித்துள்ளது. இம்முயற்சியின் கீழ் 10 ஏக்கர் பாழடைந்த காடுகளில் சுமார் 10,000 மரங்கள் மீண்டும் நடப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular