Sunday, February 16, 2025
HomeAstrology Newsலாப வீட்டுக்கு செல்லும் சனி! பணம் கொட்ட போகுது சிம்ம ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

லாப வீட்டுக்கு செல்லும் சனி! பணம் கொட்ட போகுது சிம்ம ராசிக்கான 2025 புத்தாண்டு பலன்கள்!

சிம்ம ராசிக்கு 7ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் 8ஆம் இடத்திற்கு செல்கிறார். இது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகின்றது. கண்ட சனி காட்டிலும் அஷ்டம சனி பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும். வாழ்கையில் அடுத்த கட்டம் செல்வதற்கான அஸ்திவாரம் இடுவீர்கள்.

வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 2025ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அடுத்து வரும் மே 18 ஆம் தேதி மீன ராசியில் இருக்கக்கூடிய ராகு பகவான், கும்ப ராசிக்கும், கன்னி ராசியில் இருக்கக்கூடிய கேது வந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். ஒரு ராசியில் நீண்டநாள் இருந்து தாக்கம் செலுத்தும் சனி பகவான், குரு பகவான், ராகு, கேது பகவான் ஆகியோரின் பெயர்ச்சி நடக்கும் ஆண்டாக 2025ஆம் ஆண்டு உள்ளது.

சனி பெயர்ச்சி
சிம்ம ராசிக்கு 7ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் 8ஆம் இடத்திற்கு செல்கிறார். இது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகின்றது. கண்ட சனி காட்டிலும் அஷ்டம சனி பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும். வாழ்கையில் அடுத்த கட்டம் செல்வதற்கான அஸ்திவாரம் இடுவீர்கள்.

சனி பகவானின் 3ஆம் பார்வை ராசிக்கு 10ஆம் இடத்தில் விழுகின்றது. இதனால் ஏற்கனவே வேலை இல்லாதவர்கள், தொழில் தொடங்கியும் சரியாக நடத்த முடியாதவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். தொழில் மற்றும் வேலையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். போதைய வருமானம் இல்லாமல் தவித்தவர்களுப்பு புதிய மாற்றம் உண்டாகும்.

சனி பகவானின் 7ஆம் பார்வை 2ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். ஆனாலும் பணவரவு சீராக விளங்கும். சனி பகவானின் 10ஆம் பார்வை ராசிக்கு 5ஆம் இடத்தில் விழுகின்றது. இதனால் குழந்தைகள் வழியில் நன்மைகள் உண்டாகும். குழந்தைகளின் நன்மைகளுக்காக நிதிகளை செலவு செய்வீர்கள்.

குரு பெயர்ச்சி
சிம்மம் ராசிக்கு 10ஆம் இடத்தில் இருந்த குரு 11ஆம் வீட்டுக்கு வர உள்ளார். லாப ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்வதால் தொழிலில் லாபம் உண்டாகும். நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூல் ஆகும். கடன் எதிர்ப்பார்ப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு தீரும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்குவீர்கள். எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.

இளைய சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்னைகள் மாறி ஆதரவு கரம் நீட்டுவார்கள். தொழில் ரீதியிலான முயற்சிகள் நல்ல முடிவுகளை உருவாக்கி தரும். குரு பகவான் 5ஆம் வீட்டை பார்ப்பதால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மனரீதியாக உளைச்சல்கள் இருந்தாலும் அது விரைவில் தீரும்.

குருவின் 9ஆம் பார்வை 7ஆம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் நிலவி வந்த பிரச்னைகள் தீரும்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு பகவான் 7ஆம் இடத்திற்கு செல்வதால் வாழ்கை துணை பெயரில் செய்யும் விஷயங்கள் நன்மையை தரும். அதே போல் ஜென்மராசிக்கு கேது பகவான் வருவதால் சிக்கல்களை சந்திக்க கூடிய நிலை உண்டாகும். இருப்பினும் 11ஆம் இடத்தில் உள்ள குரு இதனை சரி செய்வார்.

பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular