Two hospitalized following assault by Archchuna 5957
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார்.
இதன் போது அங்கு நின்றவர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார்.

இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டதாக குறித்த நபர்களின் ஒருவர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
10 நாட்களில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் புதிய திட்டம் ஆரம்பம்!
சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்!
இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைப்பு!
வழமைக்கு திரும்பும் மின்விநியோகம் – காரணம் இதுதான்!
இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முறுகல் நிலையை தடுக்க வந்த பிறதொரு நபரையும் அர்ச்சுனா ராமநாதன் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
Two hospitalized following assault by Archchuna 5957

இதையும் படியுங்கள்
கோதுமை மாவின் விலை குறைந்தால் பாண் விலை குறையும்!
மன்னாரில் நீதிமன்றுக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு – இருவர் பலி!
பேருந்துகளில் அபாயகரமான உதிரி பாகங்கள் நீக்கம்!
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் மாயமான பொருட்கள் குறித்து விசாரணை
வாகன அலங்காரத்தின் வரம்புகள் உங்களுக்குத் தெரியுமா?
ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று ஆரம்பம்
