4 school students seriously injured in three wheeler accident 3475
பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐ சேர்ந்த மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் முடிந்து நான்கு மாணவர்களும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த லங்கம பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற பேருந்து வீதிக்கு வௌியே செலுத்தப்பட்டுள்ளது.
அப்போது, அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதி பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 school students seriously injured in three wheeler accident 3475
இதையும் படியுங்கள்
பொதுத் தேர்தலில் 667,240 வாக்குகள் நிராகரிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு!
புதிய நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெண் பிரதிநிதிகள்!
நாடாளுமன்ற இணையவழி பதிவு ஆரம்பம்!
ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல்

ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல்
