Saturday, February 8, 2025
HomeCinema Newsஅதிரடியாக களமிறங்கும் தனுஷின் 12 படங்கள்!

அதிரடியாக களமிறங்கும் தனுஷின் 12 படங்கள்!

12 films of dhanush that will make a splash 3042

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர், நடிகர் தனுஷ். இந்த வருடம் மட்டுமன்றி இனி வரப்போகும் வருடங்களில் படு பிசியான நடிகராக வலம் வர இருக்கிறார். இவர் மொத்தம் 12 ப்ராஜெக்ட்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் பூஜை, சமீபத்தில் நடந்து முடிந்தது. இது, தனுஷின் 55 படமாகும்.

நடிகர் தனுஷ் அடுத்து, தன்னை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறனுடன் மீண்டும் கூட்டணி வைப்பதாக கூறப்படுகிறது.

கர்ணன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் உடன் கைக்கோர்க்கிறார் தனுஷ். பைசன் படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஞ்சனா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தனுஷை வைத்து இயக்கிய ஆனந்த் எல்.ராய் அடுத்து தேரே இஷ்க் மெயின் என்ற இந்தி படத்தை இயக்க இருக்கிறார்.

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் உருவாகி வருகிறது. இதை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தற்போது ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது.

தனுஷ், இட்லி கடை படத்தை எழுதி, இயக்கி நடித்து வருகிறார். இதில் அவருடன் சேர்ந்து நித்யா மேனனும் நடிக்கிறார். இந்த படம் வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது.

தனுஷின் 51வது படம், குபேரா. இந்த படம், ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. இப்படம் இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை படங்களை அடுத்து தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தைகளும் நடைப்பெற்று வருகின்றன. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் மற்றும் மகாராஜா படத்தை இயக்கிய நிதிலன் ஆகியோரில் ஒருவர் தனுஷ் படத்தை இயக்கலாம். அல்லது, ஒருவர் பின் ஒருவராக இயக்கலாம் என திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.

12 films of dhanush that will make a splash 3042
இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்!

பிரபல பாடசாலையில் இடிந்து வீழ்ந்த தடுப்பு சுவர்!

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

வாக்களிக்காத மக்கள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்

வாக்களிக்காத மக்கள் தொடர்பில் ஜனாதிபதி விளக்கம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular