Monday, February 10, 2025
HomeCinema Newsமுன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

முன்னணி நடிகருடன் மோதும் தனுஷ்!

dhanush clashes with a leading actor 3024

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் தனுஷ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் இட்லி கடை திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இட்லி கடை திரைப்படம் வெளிவரவிருக்கும் அதே நாளில் சூர்யா 44வது படமும் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர். கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூர்யா 44. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காத நிலையில் சூர்யாவின் 44வது என்பதால் அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 2025 ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் கூறுகின்றனர்.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இட்லி கடை மற்றும் சூர்யாவின் 44வது படமும் வெளிவரவுள்ளது.

dhanush clashes with a leading actor 3024

இதையும் படியுங்கள்

புதிய நாடாளுமன்றில் அநுரவின் முக்கிய நடவடிக்கை!

4 நாட்களில் ​கோட் வசூலை முந்திய அமரன்!

சாரதிகள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை!

காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் – உடனடி தீர்வுகளை வழங்க அறிவுறுத்தல்!

வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் - உடனடி தீர்வுகளை வழங்க அறிவுறுத்தல்!

எம்.பி.க்கள் சம்பளம், வாகனம் தேவையில்லை!

எம்.பி.க்கள் சம்பளம், வாகனம் தேவையில்லை!
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular